ETV Bharat / bharat

தங்க கடத்தல் வழக்கு: தகவல் கேட்ட கேரள எம்.பி.க்கள் - மறுத்த மத்திய அரசு! - திருவனந்தபுரம் விமான நிலையம்

டெல்லி: திருவனந்தபுரம் விமான நிலைய தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக கேரள அரசு கோரிய கூடுதல் தகவல்களை வழங்க முடியாதென மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

தங்க கடத்தல் வழக்கு : தகவல் கேட்ட கேரள எம்.பி.க்கள் - மறுத்த மத்திய அரசு!

author img

By

Published : Sep 14, 2020, 6:00 PM IST

இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இந்தக் கூட்டத்தொடரை முன்னிட்டு திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக கேரள நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களான அன்டோ ஆண்டனி, என்.கே. பிரேமச்சந்திரன், டீன் குரியகோஸ் ஆகியோர் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தனர். இதற்கு மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் இணையமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

அந்தப் பதிலில், "மக்களவையில் கேரள மாநில உறுப்பினர்கள் கோரியதை போல தங்கக் கடத்தல் வழக்கு குறித்த கூடுதல் விவரங்களை உடனடியாக மத்திய அரசால் வழங்க முடியாது.

அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும், பொதுநலனில் ஏற்படக்கூடாது என்பதால் தான் இதனை கூறுகிறோம்.

இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது.

கேரள மாநிலத்தின் விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் இருந்து 30 கிலோவுக்கும் அதிகமான தங்கத்தை பறிமுதல் செய்து 16 பேரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நியாயமான, முறையான விசாரணைக்கு மத்திய அரசு தேவையான பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. வழக்குகளின் மேலதிக விவரங்களை வெளியிடுவது வழக்கின் விசாரணையைப் பாதிக்கும்.

கேரளா தங்கக் கடத்தல் வழக்குகளில் பணமதிப்பிழப்பு தடுப்புச் சட்டத்திற்கான (பி.எம்.எல்.ஏ) அமலாக்க இயக்குநரகம் (இ.டி) தனது விசாரணையை மேற்கொண்டுவருகிறது.

நாட்டின் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் 1999-யின் கீழ் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.

2015 -2016ஆம் ஆண்டில் 2,696 வழக்குகள் பதியப்பட்டு 2,452 கிலோ தங்கம் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. 2016 - 2017ஆம் ஆண்டில் 1,453 வழக்குகள் பதியப்பட்டு 921 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2017 - 2018ஆம் ஆண்டில் 2,911 வழக்குகள் பதியப்பட்டு 1,996 கிலோ பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. 2018 - 2019ஆம் ஆண்டில் 4,855 வழக்குகள் பதியப்பட்டு 2,946 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2019 - 2020ஆம் ஆண்டில் 4,444்வழக்குகள் பதியப்பட்டு 2,629 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் இதுவரை 196 வழக்குகள் பதியப்பட்டு, 103 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.