வெங்காயம் என்பது இந்திய சமையல் அறையில் ஒரு முக்கிய பொருளாக உள்ளது. அப்படிப்பட்ட வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்துவருகிறது.
இந்தியாவில் வெங்கய விலை ஏற்றம் தேர்தல் முடிவுகளையே தீர்மானித்த வரலாறும் உள்ளது. இதன் காரணமாக வெங்காய விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த இறக்குமதியை ஊக்குவிப்பது, ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் என மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசு வெங்காய விதைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலாண்டில் சுமார் 5.7 லட்சம் டாலர் மதிப்பிலான வெங்காய விதைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் எவ்வளவு வெங்காயத்தை சேமித்து வைக்கலாம் என்பதற்கும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சைக்கிள்களுக்கு மாற வேண்டிய நேரம் இது - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி