நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. கடந்த ஒன்றாம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்கள் - அதற்கெதிராக நடைபெறும் போராட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரலெழுப்பிவருகின்றன. குறிப்பாக, இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் அழுத்தம் தரப்பட்டுவருகிறது.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பின் உடனடியாக வேளாண் சட்டப் போராட்டங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி வலியுறுத்தியுள்ளார்.
இதையடுத்து வேளாண் சட்டம் தொடர்பாக நாடாளுமன்ற விவாதத்திற்கு அரசு தயாராகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவாதத்தின்போது அரசு தனது நிலைப்பாட்டை விளக்கி சட்டத்தின் சாதகமான அம்சங்களை விரிவாக எடுத்துரைக்கும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பட்ஜெட் கூட்டத்தொடர்: இ-நாம், எம்எஸ்பி குறித்து மத்திய அரசு விளக்கம்!