ETV Bharat / bharat

'மருத்துவ வசதி இருந்தும் மக்கள் சிரமப்படுகிறார்கள்' - ஆளுநர் கிரண்பேடி குற்றச்சாட்டு! - Hospitals in puducherry

புதுச்சேரி: போதிய மருத்துவ வசதி இருந்தும் புதுச்சேரி மக்கள் சிரமப்படுவதாக ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் கிரண்பேடி
ஆளுநர் கிரண்பேடி
author img

By

Published : Aug 21, 2020, 3:53 AM IST

புதுச்சேரியில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. இருப்பினும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் படுக்கைகளை அரசு பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் போதிய மருத்துவ வசதி இருந்தும் மக்கள் சிரமப்படுகிறார்கள் என்றும் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதில் தலையிட வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விடுத்துள்ள வாட்ஸ்அப் அறிக்கையில், "புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7இல் 2 தவிர மீதமுள்ளவை. நோயாளிகளுக்கு தற்போது படுக்கை வசதி தேவைப்படுகிறது. மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகிறார்கள்.

சட்டப்படி ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியை அரசு எடுத்துக் கொண்டால் இதர தனியார் மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் தேவைப்படும் வரிசையின் கீழ் அரசு கட்டுப்பாட்டில் வரும். இதுவரை ஏன் இது எடுக்கப்படவில்லை என்று தெரியவில்லை. மொத்தமாக 5000 படுக்கைகள் உள்பட போதிய மருத்துவ வசதி புதுச்சேரியிலிருந்தும் மக்கள் சிரமப்படுகிறார்கள். அதனால் இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையீடு தேவை. தேவையானதைச் செய்ய புதுச்சேரி அரசை வழி நடத்துங்கள்.

புதுச்சேரி சிகிச்சை, விஷயத்தில் பாதிக்கப்பட்டுள்ளதை மத்திய அரசு அறிய வேண்டும். இது தொடர்பாக டெல்லிக்கு தெரிவித்துள்ளேன்" என்று கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.