இது தொடர்பாக துணைநிலை ஆளுநரின் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,"புதுச்சேரி சட்டப்பேரவையின் ஆண்டு நிதிநிலை அறிக்கை மற்றும் மானியங்களுக்கான கோரிக்கை வழங்குவதற்கான ஒப்புதல் கோரும் உத்தேச திட்டம் புதுச்சேரி நிதித் துறையிலிருந்து (21.7.2020) மாலை முதலமைச்சர் நாராயணசாமி மூலம் பெறப்பட்டது.
வரும் 24.7.2020 அன்று காலை 09.30 மணிக்கு சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரையாற்றுவதற்கான அழைப்பு கடிதம் முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் ஆகியோரிடமிருந்து நேற்று (22.7.2020) பெறப்பட்டது.
சட்டப்பேரவையில் உரையாற்றுவதற்கான அழைப்பை துணைநிலை ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
உள்துறை அமைச்சகம் வழங்கிய ஒப்புதலின் அடிப்படையில் புதுச்சேரி சட்டப்பேரவையின் முன் வருடாந்திர நிதி அறிக்கை மற்றும் மானியங்களுக்கான கோரிக்கை ஆகியவற்றிற்கான தனது பரிந்துரையை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வரும் 24ஆம் தேதியன்று பேரவை உரையில் எடுத்துரைப்பார்" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.