மத்திய விமானப் போக்குவரத்துதுறை அமைச்சகம் விமானப் பயண விதிமுறைகளில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சகத்தின் இணை செயலளர் உஷா பாதி அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, உள்நாட்டு விமானப்போக்குவரத்தில் பேகேஜ்(லக்கேஜ்) கட்டுப்பாடுகள் இனிக் கிடையாது எனக் கூறப்பட்டுள்ளது.
பயணிகள், பொதுமக்களிடம் தொடர்ச்சியாக கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானப்போக்குவரத்து ஒழுங்குமுறை அணையத்தின் விதிப்படி உள்நாட்டு விமானத்தில் பயணம் மேற்கொள்பவர்கள் 15 கிலோ வரையில் லக்கேஜுகளை இலவச செக்-இன்ஆக கொண்டு செல்லலாம். அதைத் தாண்டினால் கூடுதல் பணம் செலுத்த வேண்டும்.
கோவிட்-19 காலத்தில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து முடக்கம் மெல்ல தளர்வு சந்தித்துவரும் நிலையில், அதை மேலும் ஊக்குவிக்கும் விதமாக அமைச்சம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: காஷ்மீரின் பிரபல வழக்கறிஞர் பாபர் காத்ரி சுட்டுக்கொலை