ETV Bharat / bharat

'அரசு அலுவலர்கள் பொதுமக்களிடம் தோழமையோடு பழக வேண்டும்' - முதலமைச்சர்

author img

By

Published : Sep 11, 2019, 3:20 PM IST

புதுச்சேரி: அரசு அலுவலர்கள் பொதுமக்களிடம் தோழமையோடு பழக வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

puducherry-cm-narayanasamy

பேரழிவு தடுப்பு வடிவமைப்பு மற்றும் கட்டுமான நடைமுறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் புதுச்சேரி தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. புதுச்சேரி நகர மற்றும் கிராம அமைப்புத் துறை, மத்திய வீட்டுவசதி-நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த ஒருநாள் கருத்தரங்கில் பல்வேறு அரசுத் துறை, உள்ளாட்சி அமைப்பினர், பொறியியல் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன் தொடக்க விழாவில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் சார்பில் அரசு செயலர் சங்கர் மிஸ்ரா தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் நாராயணசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர், புதுச்சேரியில் பொதுமக்களை அரசு அலுவலர்கள் அலைக்கழிப்பது தொடர்கிறது என்றும் இதுபோன்ற செயல்களை செய்யக் கூடாது என்றும் ஏற்கனவே கூட்டம் நடத்தி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். அரசு அலுவலர்கள் பொதுமக்களுடன் நட்போடு பழக வேண்டும்; தோழமையுடன் இருக்க வேண்டும் என்றார்.

பொதுமக்களுக்கு அரசு ஏராளமான நலத் திட்டங்களை செய்துவருகிறது என்று கூறிய முதலமைச்சர், புதுச்சேரி 11 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது என்றார். வளர்ச்சி அடைந்து வரும் புதுச்சேரிக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்ய மறுப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், மத்திய அரசு எதிர்மறையான அணுகுமுறையை கடைப்பிடிப்பதாக சாடினார்.

இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் புதிய முறைகளை கடைப்பிடித்து பொறியாளர்கள் கட்டடங்களை கட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கறுப்புப் பண ஒழிப்பு என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழில், கட்டுமான தொழில்களை மத்திய அரசு ஒழித்துவிட்டதாகவும், பொருளாதார வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் என்றார்.

பேரிடர் மேலாண்மை கருத்தரங்கில் நாராயணசாமி பேச்சு

இதனிடையே முதலமைச்சர் நாராயணசாமி மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் பேசிக்கொண்டிருந்ததால் அவர் மேடையிலேயே கண்டித்தார். தொடர்ந்து மேடையிலிருந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை தாங்கள் வந்து உரையாற்றலாம் என்று கூறியதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Intro:அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் தோழமையோடு பழக வேண்டும் அரசு விழாவில் முதல்வர் நாராயணசாமி பேச்சு

மேடையிலே தான் பேசும்போது இடைஞ்சலாக பேசிக்கொண்டிருந்த சுற்றுலாத்துறை அமைச்சரை டோஸ் விட்ட முதல்வர்

Body:பேரழிவு தடுப்பு வடிவமைப்பு மற்றும் கட்டுமான நடைமுறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் புதுச்சேரி தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது புதுச்சேரி நகர மற்றும் கிராம அமைப்பு துறை மற்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த ஒருநாள் கருத்தரங்கில் பல்வேறு அரசுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு சார்ந்தவர்கள் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் கல்வி நிறுவனங்கள் கட்டுமான பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் இதன் துவக்க விழாவில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் சார்பில் இந்தியா அரசு செயலர் சங்கர் மிஸ்ரா தலைமையேற்று நடைபெற்றது ஒருநாள் கருத்தரங்கத்தை முதல்வர் நாராயணசாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் பின்னர் விழாவில் பேசிய முதல்வர் நாராயணசாமி அவர்

புதுச்சேரியில் பொதுமக்களை அரசு அதிகாரிகள் அழைக்கழிக்கின்றனர் இது போன்ற செயல்களை செய்யக்கூடாது என்றும் ஏற்கனவே கூட்டம் நடத்தி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்த அவர் அரசு அதிகாரிகள் பொது மக்களுடன் நட்போடு பழக வேண்டும் தோழமையுடன் இருக்க வேண்டும் பொதுமக்களுக்கு அரசு ஏராளமான நலத் திட்டங்களை செய்து வருகிறது அரசு நிர்வாகத்துக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் புதுச்சேரி 11 சதவீதம் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது வளர்ச்சி அடைந்து வரும் புதுச்சேரிக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்ய மறுக்கிறது மத்திய அரசு எதிர்மறையான அணுகுமுறையை கடைபிடிப்பதாக குற்றம் சாட்டினர்

இயற்கைப் பேரிடர்களை தாங்கும் வகையில் புதிய முறைகளை கடைபிடித்து பொறியாளர்கள் கட்டிடங்களை கட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்

கருப்பு பணத்தை ஒழிப்பு என்ற பெயரில் ரியல் எஸ்டேட் வியாபாரம் மற்றும் கட்டுமான பணிகளை மத்திய அரசு ஒழித்துவிட்டன இதனால் பொருளாதார வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமாக விளங்கி விட்டது என்றார்

முதல்வர் நாராயணசாமி மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாய திடம் பேசிக்கொண்டிருந்ததால் கடுப்பான முதல்வர் நாராயணசாமி பேசுவதை நிறுத்திவிட்டு ,

மேடையில் இருந்த

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நீங்க இங்கு வந்து பேசலாம் என்றார் இதனால் சிறிது நேரம் மேடையில் சலசலப்பு ஏற்பட்டது

Conclusion:அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் தோழமையோடு பழக வேண்டும் அரசு விழாவில் முதல்வர் நாராயணசாமி பேச்சு

மேடையிலே தான் பேசும்போது இடைஞ்சலாக பேசிக்கொண்டிருந்த சுற்றுலாத்துறை அமைச்சரை டோஸ் விட்ட முதல்வர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.