ETV Bharat / bharat

பறிமுதல்செய்த வாகனங்கள்: சட்டவிரோதமாக உரிமையாளருக்கே வழங்கிய அரசு ஊழியர் கைது! - transport office employee

புதுச்சேரி: பறிமுதல்செய்யப்பட்ட வாகனங்களை லஞ்சம் வாங்கிக்கொண்டு உரிமையாளருக்கே திருப்பி வழங்கிய போக்குவரத்து துறை ஊழியர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பறிமுதல் செய்த வாகனங்கள்… சட்டவிரோதமாக உரிமையாளருக்கே வழங்கிய அரசு ஊழியர் கைது!

author img

By

Published : Nov 10, 2020, 6:47 PM IST

புதுச்சேரி 100 அடி சாலையில் அமைந்துள்ளது மாநிலப் போக்குவரத்துத் துறை அலுவலகம். இங்கு, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, உரிமம் இன்றி சுற்றுலாப் பயணிகளுக்கு இருசக்கர வாகனங்களை வாடகைக்கு கொடுத்ததாக, 20 இருசக்கர வாகனங்களை, போக்குவரத்து துறையினர் பறிமுதல்செய்து போக்குவரத்துத் துறை அலுவலகத்திற்குள் நிறுத்திவைத்திருந்தனர்,

இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி, அவ்வாறு நிறுத் வைக்கப்பட்டிருந்த வாகனங்களை, போக்குவரத்து துணை ஆணையர் சத்தியமூர்த்தி ஆய்வுசெய்தார். அப்போது 20 இருசக்கர வாகனங்களில் 11 வாகனங்கள் மட்டுமே இருந்தது. மீதமுள்ள 9 இருசக்கர வாகனங்கள் காணாமல்போயிருந்தது இந்த ஆய்வின்போது தெரியவந்தது.

இதனையடுத்து, காணாமல்போன வாகனங்கள் குறித்து, போக்குவரத்துத் துணை ஆணையர் சத்தியமூர்த்தி, முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், காணாமல்போன வாகனங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் வீரப்பன், 9 இருசக்கர வாகனங்களையும், அதன் உரிமையாளர்களிடம் கொடுத்து பணம் பெற்றுள்ளது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, வீரப்பனை கைதுசெய்த காவல் துறையினர், 9 வாகனங்களையும் மீட்டு போக்குவரத்து துறையிடம் ஒப்படைத்தனர். வீரப்பனை, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், அவரை மத்திய சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.