இந்தியாவின் முதல் தனியார் அதிவேக ரயிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து கடந்த 5ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் இந்திய ரயில்வே துறைக்குச் சொந்தமான 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களை தனியார் மயப்படுத்தும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து நிதி ஆயோக்கின் தலைவர் அமிதாப் காந்த், ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், '' ரயில்வே அமைச்சகம் பயணிகள் ரயில்களை தனியார் நிர்வாகங்கள் இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக முதற்கட்டமாக 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களை தனியார் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை செய்து வருகிறது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சருடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டோம். அதற்கான அதிகாரம் படைத்த குழுவில் அமிதாப் காந்த், வினோத் குமார், பொருளாதார விவகாரத் துறை செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சக செயலாளர் ஆகியோர் இருப்பார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: 50 வழித்தடங்களை தனியாரிடம் ஒப்படைக்க ரயில்வேத்துறை பரிசீலனை