தேசிய குடிமக்கள் பதிவேடு கோரும் முக்கிய ஆவணங்களை மீண்டும் விண்ணப்பித்து பெறுவதற்கு மத்திய அரசு மக்களுக்கு உதவுமா என திமுக எம்பி திருச்சி சிவா மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த மத்திய இணையமைச்சர் நித்தியானந்தா ராய், "2020ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டின்போது ஆவணங்கள் எதுவும் கேட்கப்படாது.
தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்துவது குறித்து அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை" என்றார்.
டெல்லி வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறித்து திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த நித்தியானந்தா, "வன்முறையில் சிக்கி 52 பேர் உயிரிழந்தனர்; 545 பேர் படுகாயம் அடைந்தனர்" என்றார்.
இதையும் படிங்க: மார்ச் 22ஆம் தேதி மக்கள் ஊரடங்கு - பிரதமர் மோடி வேண்டுகோள்!