ETV Bharat / bharat

'தோல்வியடைந்தால் கவலை வேண்டாம்...' - வாய்ப்பளிக்கிறது சிபிஎஸ்இ! - second chance to CBSE students to clear exams

தேர்வில் தோல்வியடையும் 9,11 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு, பள்ளி அளவில் மறுதேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

CBSE re exam
CBSE re exam
author img

By

Published : May 15, 2020, 6:42 PM IST

டெல்லி: 9, 11ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மறுதேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்சி கல்வி ஆணையம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பொது ஊரடங்கு காரணமாக, 1 முதல் 8ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்குத் தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டது. அதேபோன்று 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு, செய்முறைத் தேர்வு, திறன் மதிப்பீட்டுத் தேர்வுகள் ஆகியன இணையம் வழியாகவே நடத்தி முடிக்கப்பட்டு, அதனடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

இணையத் தேர்வுகளில் பெரும்பாலான மாணவர்கள் தோல்வியடைந்ததால், மறு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். மாணவர்கள், பெற்றோர்களின் கோரிக்கையைப் பரிசீலித்த சிபிஎஸ்இ, வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் எழுத்துத் தோ்வு நடத்தப்படும் என்றும், இணைய வழித் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் எழுத்துத்தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என்றும்; மாணவர்கள் தோ்வுக்குத் தயாராகும் வகையில், போதிய கால இடைவெளிக்குப் பிறகே தேர்வு நடைபெறும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. ஏற்கெனவே நடைபெற்ற இணையவழித் தோ்வில் தோல்வியடைந்த 9, 11ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதால், அடுத்த கல்வியாண்டுக்கான மாணவா்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்றும்; சிபிஎஸ்இ தனது அறிக்கையில் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்த மேம்பட்ட தகவல்களுக்கு, இந்த இணைப்பைச் சொடுக்கவும்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.