ETV Bharat / bharat

இந்தியா - வங்கதேச உறவுவின் ‘பொற்காலம்’ சிக்கலாகி  வருகிறது

author img

By

Published : Jul 30, 2020, 9:00 AM IST

டெல்லி: இந்திய - வங்கதேச உறவு குறித்து மூத்த செய்தியாளர் நிலோவா ராய் சௌத்திரி எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

India-Bangladesh
India-Bangladesh

கோவிட்-19 தொற்றுநோய் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து உலக நாடுகளை கடுமையாக தாக்கியதால், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பெருமளவில் செயல்படாத சார்க் அமைப்பை புதுப்பிப்பதன் மூலம் அண்டை நாடுகள் கொள்கையை உயர்த்தவும், தொற்று நோய்க்கு பொதுவான தெற்காசிய ஒத்துழைப்பை வளர்ப்பதற்கு நிதி உருவாக்கி, அண்டை நாடுகளுடன் சிறந்த நடைமுறைகளைப் பற்றி விவாதிக்க விரும்பினார்.

இருப்பினும், கோவிட் -19 தொற்று இந்தியா முழுவதும் பரவி, அதன் எண்ணிக்கையில் உலகளவில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியதால், அண்டை நாடுகளுடனான கொள்கையால், இதுவரை எதிர்பார்க்காத அளவில் மத்திய அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மட்டுமல்லாமல், பிராந்திய உறவுகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கான மத்திய அரசின் முயற்சிகள் மாலத்தீவைத் தவிர, பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய அமைப்பு (சார்க்) சார்ந்த இந்தியாவின் பிற அண்டை நாடுகளை பெரிதும் ஈர்க்கப்படவில்லை. அவர்களின் வளர்ச்சித் தேவைகளுக்காக பெய்ஜிங்கை விரும்புகிறார்கள்.

குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு நாடுகளுக்கிடையில் சிக்கலான பிரச்னைகளை கடல் மற்றும் நில எல்லை ஒப்பந்தங்கள் மூலம் தீர்த்த பின்னர் சிறப்பாக மலர்ந்த இந்தியா-வங்கதேச உறவுகளின் 'சோனார் ஆத்யாய்' அல்லது 'தங்க அத்தியாயம்', மிக வேகமாக சிக்கலாகி வருவதாக தெரிகிறது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அக்கறையின் அளவு டாக்காவிற்கு ஒரு புதிய தூதரை அனுப்பி, 16 மாதங்களுக்குப் பிறகு தற்போதைய தூதர் ரிவா கங்குலி தாஸை திரும்ப அழைத்து வருவதற்கான முடிவிலிருந்து தெளிவாகிறது. வெளிப்படையாக, தாஸ் மீண்டும் செயலர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு பெறுகிறார். ஆனால் வங்கதேசதுக்கான இந்திய தூதரின் செல்வாக்கு, அலுவலரின் தரவரிசையில் இல்லை என்பது உண்மை. இருந்தபோதிலும், இது மிகவும் அரசியல் பதவி என்பதால் மூத்த அரசியல் ராஜதந்திரிகள் பெரும்பாலும் அங்கு நியமிக்கப்படுவார்கள்.

வங்கதேசம் உருவாக்கப்பட்டதிலிருந்து, இந்திய தூதர் என்பவர் டாக்காவில் பொறாமைப்படக்கூடிய அளவிற்கு ஒரு மிக முக்கியமான நபர். வங்கதேசத்திற்கான இந்திய தூதர்கள், குறிப்பாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில், டாக்காவில் அதிகாரத்தின் உயர் பதவியில் இருப்பவர்களுடன் எப்போதும் மிக நெருக்கமான அணுகலில் இருந்தனர். அதேபோல், வங்கதேச தூதர்கள், குறிப்பாக மிக சமீபத்தில் முந்தைய தூதராக இருந்த சையத் முஸெம் அலி, மோடி அரசாங்கத்துடன் சிறந்த அணுகலை கொண்டிருந்தார்.

ஆனால் சிறந்த அணுகல் பற்றிய கேள்வி இரண்டு தேசிய தலைநகரங்களில் உள்ள அரசியல் தலைமைக்கு இடையிலான நெருக்கத்திலிருந்து உருவாகிறது. இது கடந்த ஆண்டு டாக்காவில் தெளிவாகத் தெரிந்தது. ஆளும் பாஜக தலைவர்களின் வங்கதேசத்தவர்களை ‘கரையான்கள்’ என்று அழைத்த சொல்லாட்சியில் அரசாங்க மட்டத்தில் மட்டுமல்ல, வங்கதேசத்தில் உள்ள சாமானியர்களும் ஆழ்ந்த கோபத்தில் உள்ளதால் ஷேக் ஹசீனா உறவுகளின் புரிதலை தக்கவைத்துக்கொள்வது மிகவும் கடினம். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் வங்கதேசத்தையும், சிறுபான்மையினரைத் துன்புறுத்தும் நாடுகளாக தனிமைப்படுத்தும் இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் விதிகளாலும் அவரது அரசாங்கம் மிகவும் வேதனை அடைந்துள்ளது.

வகுப்புவாத சாயத்தை மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் கலாசார உறவுக்குள் கொண்டு வருவது வங்கதேசத்துக்கு பிடிக்கவில்லை. ஆண்டுக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உள்ள சார்க்கிற்குள் மிகப்பெரிய பொருளாதார உறவு, இந்திய பெரும்பான்மை போக்குகளைத் தடுக்க முடியாமல் இந்தியாவிலிருந்து கவனத்தை திசை திருப்பியுள்ளது.

இந்த கவலையளிக்கும் உறவுகள் தாஸ் நான்கு மாதங்களுக்கும் மேலாக வங்கதேச பிரதமருடன் சரிவர விவாதிக்கவில்லை என்பதில் பிரதிபலித்தது. முன்னதாக டாக்காவில் கலாசார ஆலோசகராக பணியாற்றிய தாஸ், ஷேக் ஹசீனாவின் மகத்தான தேர்தல் வெற்றியின் பின்னர், அவரது முந்தைய பதவிக்காலத்தை வெற்றிகரமாக பின்பற்றுவார் மற்றும் இருதரப்பு உறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வார் என்ற எதிர்பார்ப்புடன் 2019 மார்ச்சில் விரைவில் அங்கு சென்றார். இந்தியாவின் வெளியுறவு செயலராக இருக்கும் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லாவைத் தொடர்ந்து அவர் வங்கதேசத்தில் தூதராக பொறுப்பேற்றார். ஆனால் எதிர்பார்ப்புகள் பொய்யாகிவிட்டன. வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரால் மிகவும் மதிக்கப்படும் தொழில் ராஜதந்திரி விக்ரம் துரைசாமியால், அந்நாட்டவரின் உணர்ச்சி புரிதலையும் பன்முக சக்தியையும் மீண்டும் பெற முடியும் என்பதால் தாஸ் டாக்காவிலிருந்து மாற்றப்படுகிறார்,

கொல்கத்தாவிலிருந்து முதல் கன்டைனர் சரக்குகள் சட்டோகிராம் (சிட்டகாங்) துறைமுகம் வழியாக அகர்தலாவை அடைந்து இருதரப்பு கடல் உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டிய ஒரு வாரத்திற்கு பின்னர், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை புத்துயிர் பெறுவதற்காக 10 அகலபாதை என்ஜின்களை வங்கதேசத்துக்கு ஒப்படைத்தது போன்ற இந்தியாவின் முயற்சிகள், சீனா சமீபத்தில் துரித வளர்ச்சிக்கான உதவிகளை வங்கதேசத்துக்கு வழங்கியுள்ளதுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவாகவே இருக்கிறது.

இந்த இந்திய இணைப்புத் திட்டங்கள், 2019ஆம் ஆண்டு அக்டோபரில் ஷேக் ஹசீனாவின் இந்தியப் பயணத்தின் போது இந்தியா வழங்கிய உதவித் திட்டத்தின் ஒரு பகுதி, அரசியல் சேதத்தை தவிர்க்க போதுமானதாக இல்லை. முக்கியமான தேவைகள் பலவற்றை நிறைவேற்ற டாக்காவை டெல்லியில் இருந்து பெய்ஜிங்கை நோக்கி தள்ளும்படி கட்டாயப்படுத்தியது. காக்ஸ் பஜாரில் உள்ள பெக்குவாவில் ஒரு நவீன நீர்மூழ்கிக் கப்பல் தளத்தை அபிவிருத்தி செய்தல், முக்கியமான வங்காள விரிகுடாவில் ரோந்து செல்வது, வங்கதேச கடற்படைக்கு இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்குவது மற்றும் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில், சில்ஹெட்டின் சர்வதேச விமான நிலையத்தில் ஒரு புதிய முனையத்திற்கான ஒப்பந்தம் பெய்ஜிங் நகர கட்டுமானக் குழு லிமிடெட்டுக்கு தருவது போன்ற முக்கிமான தேவைகள் இதில் அடங்கும். சில்ஹெட் என்ற இடம் அஸ்ஸாமின் மாநில எல்லையில் உள்ளது.

பல வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்த தொடர்ச்சியான வங்கதேச உதவி பெரும் காரணமாக உள்ளது. உறவுகள் சிக்கலாகி வரும் இந்த சமயத்தில் பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கானுடன் ஷேக் ஹசீனா கலந்துரையாடியுள்ளது, காஷ்மீர் பிரச்னை பற்றி விவாதித்தாலும், இந்தியா அதிகரிக்கும் கடினமான பாதுகாப்பு சூழ்நிலையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. இது, அதன் பொருளாதார மறுமலர்ச்சி முயற்சிகளுக்கு மேலும் தடையாக இருக்கும்.

துண்டிக்கப்படுதல் அதிகாரபூர்வ அறிக்கைகள் மூலமாகவும் தோன்றுகிறது, ஏனெனில் வங்கதேச தகவல் அமைச்சர் ஹசன் மஹ்மூத், பல பரிணாம இருதரப்பு ஒத்துழைப்பை பற்றி பேசுகையில், வங்கதேசம் உருவான காலத்திற்கு சென்றார். "சுதந்திரம் பெற்றதிலிருந்து வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிறது," என்றும் “சுதந்திரப் போரில் அதன் வரலாற்றுப் பங்கிற்கு நன்றி சொல்ல வேண்டும்” என்றும் கூறினார். காஷ்மீர் தொடர்பான பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் பிரதமர்களின் பேச்சுவார்த்தைகளுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், வங்கதேசத்துடனான உறவுகளை “நீண்டகாலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்பது வரலாறு” என்று வர்ணிக்கும் அதே வேளையில், ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் "உள் விஷயம்" என்ற டாக்காவின் கருத்தையும் பாராட்டினார்

பாகிஸ்தான் - வங்கதேச பேச்சுவார்த்தைகளில் காஷ்மீர் பற்றிய குறிப்பு இந்தியாவுக்கு நல்லதல்ல, ஏனெனில் சீனா தன்பக்கமாக மாற்றும் முயற்சிகளை நுட்பமாக திட்டமிடுகிறது. இருதரப்பு உறவைக் காப்பாற்றுவதற்கும் வளர்ப்பதற்கும் ஒரு "புகழ்பெற்ற கடந்த காலத்தை" செயல்படுத்துவது போதுமானதா? என்பது குறித்து காலம் தான் பதில் சொல்லும்.

இதையும் படிங்க: இந்தியாவின் டிஜிட்டல் கல்வி அறிக்கை 2020 வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.