கேரளாவிலுள்ள ஐக்கிய அரபு எமிரேட் துணை தூதரகத்தின் வழியாக 30 கிலோ தங்கம் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட வழக்கில் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், சரித், கேரள முதலமைச்சரின் முதன்மை செயலர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் என்ஐஏ அமைப்பினர் விசாரணை நடத்திவருகின்றனர். இதையடுத்து,நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கேரள முதலமைச்சரின் முதன்மை செயலர் சிவசங்கரிடம் என்ஐஏ நீண்ட நேர விசாரணை நடத்தியது. விசாரணயைில் இவரிடம் தங்கக் கடத்தல் தொடர்பான பல கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு என்ஐஏ அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, ஸ்வப்னா சுரேஷிடம் என்.ஐ.ஏ அமைப்பினர் நடத்திய விசாரணையில், முதன்மை செயலர் சிவசங்கருக்கும் இந்த கடத்தல் சம்பவத்திற்கும் சம்பந்தமில்லை என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.