ETV Bharat / bharat

தங்க கடத்தல் வழக்கு: பைசல் ஃபரீத்திற்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்! - மூன்றாவது குற்றவாளி பைசல் ஃபரீத்

கொச்சி: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தலைமறைவாகியுள்ள மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பைசல் ஃபரீத்திற்கு எதிராக சர்வதேச காவல் துறையினர் ப்ளூ கார்டன் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

கேரளா தங்க கடத்தல் வழக்கு: மூன்றாவது குற்றவாளி பைசல் ஃபரீத்திற்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்!

author img

By

Published : Jul 18, 2020, 9:35 PM IST

திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு நாடுகளின் தூதரகத்திற்கு கடந்த ஜூலை 5ஆம் தேதி ரகசிய பார்சல் ஒன்று வந்தது. அந்தப் பார்சலை சோதனையிட்ட சுங்கத் துறை அலுவலர்கள் 30 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இந்தக் கடத்தலில் சம்பந்தப்பட்ட தூதரகத்தில் முன்பு பணியாற்றிய பிஆர்ஒ ஸரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்டோரை தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ ) அலுவலர்கள் கைது செய்தனர்.

இந்த வழக்கு தற்போது என்ஐஏ கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதில் மூன்றாவது குற்றவாளியான பைசல் ஃபரீத் தலைமறைவாக உள்ளார். இதனால் பைசல் ஃபரீத்தின் இருப்பிடத்தை கண்டறியும் வகையில், சர்வதேச காவல் துறையினர் ப்ளூ கார்டன் நோட்டீஸ் வழங்க வேண்டும் என என்ஐஏ கோரிக்கை விடுத்தது.

இந்தக் கோரிக்கையை ஏற்று பைசல் ஃபரீத்திற்கு எதிராக சர்வதேச காவலர்கள் ப்ளூ கார்டன் நோட்டீஸ் அளித்துள்ளனர். இதன் மூலம் பைசல் ஃபரீத் வேறு நாட்டிற்கு தப்பி செல்வது தடுக்கப்படும்.

ஏற்கனவே பைசல் ஃபரீதிற்கு எதிராக கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஜாமீனில் வெளிவரமுடியாத அளவுக்கு வாரண்டு பிறபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவரது பாஸ்போர்ட்டையும் இந்தியா ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க....தங்கக் கடத்தல் வழக்கு, சர்வதேச போலீஸ் உதவியை நாடும் என்.ஐ.ஏ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.