கோவா மாநிலத்தின் சிவசேனா துணைத் தலைவரும் செய்தித் தொடர்பாளருமான ராக்கி பிரபுதேசாய் நாயக் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசியதாவது, “நாட்டில் வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து பாஜக மகளிரணி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்கள் மௌனமாக இருக்க காரணம் என்ன?
வெங்காயம் விலையேற்றம் குறித்து அவர்கள் அறியவில்லையா? வெங்காய விலையேற்றத்தால் ஒவ்வொரு இல்லத்தரசிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பாஜக மகளிரணி பாதிக்கப்படவில்லை போலும்.
கோவா மாநிலத்திலும் வெங்காயம் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இது குறித்து மாநில பாஜக முதலமைச்சருக்கு எவ்வித கவலையும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சரின் மனைவிதான் முன்னுதாரணமாக வீதிக்கு வந்து போராட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: வெங்காயத்தால் 3 மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்துள்ளது - வைகோ