ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தில், விமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானி ஜே.பி. சிங், விமான பொறியாளர் தர்மேந்திரா ஆகியோர் வானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் இறகு பழுதடைந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்ட அலுவலர்கள், சிகிச்சைக்காக தும்கா சதர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொறியாளர் தர்மேந்திரா உயிரிழந்தார்.
மேலும், விமானி ஜே.பி.சிங்-கை மேல் சிகிச்சைக்காக துர்காபூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜேஸ்வரி கூறுவகையில், “விபத்து நடந்த இடம் தும்கா நகரில் இருந்து சுமார் 400 கி.மீ., தொலைவில் உள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானில் விமானம் விபத்து !