குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. இதில், அக்கட்சி தலைவரும் மக்களவை உறுப்பினருமான ஓவைசி கலந்துகொண்டார். மேடையில் பேசுவதற்காக அவர் சென்றபோது, மாணவி ஒருவர் மேடையில் ஏறி பாகிஸ்தான் வாழ்க என கோஷமிட்டார்.
இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், அவரிடமிருந்து மைக்கை பிடுங்கிய காவல் துறை மாணவியை கைது செய்தது. இந்நிலையில், அந்த மாணவி மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஓவைசி கூறுகையில், "பாகிஸ்தான் வாழ்க என முழக்கமிடுவது சரி அல்ல. அந்த மாணவி குறித்து கூட்டத்தை நடத்தியவர்களுக்கு தெரியவில்லை. எதிரி நாட்டை புகழ்வது சரி அல்ல. இந்துக்கள், இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள்" என்றார்.
இதையும் படிங்க: 'காஷ்மீர் போல் வடகிழக்கு மாநிலங்களில் நடக்காது' - அமித் ஷா உத்ரவாதம்