ETV Bharat / bharat

குலாம் என்றுமே எங்களின் மதிப்பிற்குரிய தலைவர் தான்!

டெல்லி : அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத், எப்போதுமே எங்களின் மரியாதைக்குரிய தலைவராகவே திகழ்வார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகிலேஷ் பிரசாத் சிங் கூறியுள்ளார்.

author img

By

Published : Sep 12, 2020, 7:11 PM IST

குலாம் என்றுமே எங்களின் மதிப்பிற்குரிய தலைவர் தான்!
குலாம் என்றுமே எங்களின் மதிப்பிற்குரிய தலைவர் தான்!

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததால், இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி மீண்டும் தலைவராக இருக்க வேண்டும் என்று ஒரு பிரிவினரும், ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று மற்றொரு பிரிவினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சீர்திருத்தங்கள், நியாயமான உள் தேர்தல்கள், கூட்டு முடிவெடுப்பது மற்றும் முழுநேரத் தலைமை என்றும், கட்சியின் முக்கிய அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் ஆகஸ்ட் 29ஆம் தேதி சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தனர்.

அந்த கடிதத்தில், குலாம்நபி ஆசாத், கபில் சிபல், மணிஷ் திவாரி, ஆனந்த் சர்மா, மிலிந்த் தியோரா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்ட 23 பேர் கையெழுத்திட்டு இருந்தனர். அந்த அதிருப்தி கடிதத்தில் கையொப்பமிட்டவர்கள் பலரும் தற்போது மறுசீரமைப்பில் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவி இருந்து நீக்கப்பட்டு, தலைமை செயற்குழுவின் உறுப்பினராக மறுசீரமைப்பில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது டெல்லி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அகிலேஷ் பிரசாத் சிங் எம்.பி., கூறுகையில், "மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக குலாம் நபி ஆசாத் பொறுப்பு வகித்து வருகிறார். அவரது விருப்பப்படியே, ஹரியானாவின் பொறுப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். மேலும், காங்கிரஸ் கமிட்டியின் தலைமையை வழி நடத்தும் தலைமை செயற்குழுவின் மூத்த ஆலோசகராகவே அவர் தொடர்வார் என கட்சி அறிவித்துள்ளது. குலாம் நபி ஆசாத் எப்போதும் கட்சியின் மதிப்பிற்குரிய தலைவராகவே நீடிப்பார்" என கூறினார்.

இந்த புதிய சீரமைப்பில் மூத்த தலைவர்களான மோதிலால் வோரா, அம்பிகா சோனி, மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் லூய்சின்ஹோ ஃபாலேரியோ ஆகியோரை பொதுச் செயலாளர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மறுசீரமைப்பிலிருந்து மிகப்பெரிய லாபம் ஈட்டியவர் ராகுல் காந்தி விசுவாசியாக கருதப்படும் ரன்தீப் சுர்ஜேவாலா ஆவார்.

மேற்கு வங்கம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான பொறுப்பாளராக பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேசத்தின் பொறுப்பாளராகவும், மாணிக்கம் தாகூர் தெலங்கானாவின் புதிய செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், கட்சியின் நிறுவன மற்றும் செயல்பாட்டு விஷயங்களில் கட்சியின் தலைமைக்கு உதவ அமைக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட சிறப்புக் குழுவில் ஆசாத், சோனி ஆகியோர் தொடர்வார்கள் என அறிய முடிகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.