இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் பரவலைக் கட்டுப்படுத்த மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து, தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியில் சுற்றித்திரிந்தால் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பொதுமக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. பல இடங்களில் தன்னார்வலர்களும் தாமாக முன்வந்து சாலைகளில் ஓவியம் தீட்டுவது, வித்தியாசமான முறையில் வேடமணிந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.
இந்நிலையில் ஒடிசா மாநிலம் கோர்தாவில் தனேஷ்வர் பிதர் என்ற நபர் மக்களைப் பயமுறுத்தும் வகையில் பேய் போல வேடமணிந்து கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.
மேலும் பொதுமக்கள் வெளியில் வரும்போது சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் எனவும் இவர் மக்களிடம் கோரிக்கைவைக்கிறார். இவரின் இந்த வித்தியாசமான முயற்சிக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:ஜோக்கர் வேடமணிந்து கரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்திய மேஜிக்மேன்!