ETV Bharat / bharat

சர்வதேச வினாடி வினா போட்டியில் 2ஆம் இடம் பிடித்த 7 வயது சிறுமி..! - உபி மாணவி சாதனை

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, சர்வதேச வினாடி வினா போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

Ghaziabad's girl secures 2nd rank in Wild Wisdom International Quiz 2020

author img

By

Published : Sep 3, 2020, 9:41 PM IST

உலகத்தை ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸ் காரணமாக, இந்தியாவிலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் திறக்காமல் இருக்கின்றன.

ஆனாலும், இந்தக் கரோனா காலத்திலும் பல மாணவர்கள் சாதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுமியான ஸ்வாதி சர்மா, அப்பகுதியில் உள்ள அமிட்டி பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறார்.

இவர் சர்வதேச அளவில் நடந்த வைல்ட் விஸ்டம் இன்டர்நேஷனல் 2020 வினாடி வினா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தப் போட்டியில் தெற்கு ஆசியா, தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு நாட்டு மாணாக்கர்களும் கலந்து கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த குட்டி சாம்ப், செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதனிடமும் உரையாடியுள்ளார்.

சர்வதேச வினாடி வினா போட்டியில் 2ஆம் இடம் பிடித்த 7 வயது சிறுமி..!

இது குறித்து குட்டி சாம்ப் ஸ்வாதி கூறுகையில், “இது போன்ற பல்வேறு வினாடி, வினா போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற வேண்டும். மேலும், என் பெற்றோரை பெருமையடையச் செய்ய வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க...நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் - காங்கிரஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.