நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் 5.8 விழுக்காடாக சரிந்திருந்த நிலையில், ஏப்ரல் - ஜூன் வரையிலான காலாண்டில் 5 விழுக்காடாக மேலும் சரிந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இதுமிகவும் மோசமான சரிவாகும்.
இந்நிலையில், பொருளாதார வளர்ச்சி 5 விழுக்காடாக குறைந்தது என்ற அறிவிப்பு எனது வெள்ளிக்கிழமையை பாழ்படுத்திவிட்டது. நிறைய வேலைகளை செய்ய வேண்டியுள்ளது. ஆனாலும் உறுதியான நம்பிக்கை எனக்கு உள்ளது என ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.