நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக ஜூலை 22ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ செலுத்தியது. பூமியிலிருந்து தூரத் தொலைவு கொண்ட பாதைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர் செப்டம்பர் 2ஆம் தேதி பிரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 1:30 மணி அளவில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடைசி நிமிடத்தில் எதிர்பாராதவிதமாக விக்ரம் லேண்டரிலிருந்து சமிக்ஞை (சிக்னல்) துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்தார். இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீர் தன் ட்விட்டர் பக்கத்தில், "பின்னடைவுகளிலிருந்து கற்றுக்கொள்ளவில்லை என்றால்தான் அது தோல்வி. நாங்கள் வலிமையுடன் திரும்பிவருவோம். 100 கோடி இந்தியர்களை கனவு காணவைத்த இஸ்ரோவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நம் சிறப்பை இன்னும் முழுமையாக வெளிப்படுத்தவில்லை" என்றார்.