உத்தரகாண்ட மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கோத்திரி கோயில் நடை, குளிர் காலத்தையொட்டி, அனகுத் கோவர்தன் பூஜையுடன் இன்று பிற்பகல் மூடப்பட்டது.
கோயில் நடை மூடப்பட்ட பிறகு, கங்காவின் சிலை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் மூலம் முப்மாக கிராமத்திற்கு, கொண்டுச் செல்லப்பட்டது. இக்குளிர்காலம் முடியும் வரை கங்காவின் சிலைகள் அங்கு வைத்து பூஜிக்கப்படும்.
இந்த கோயில் நடை மூடும் நிகழ்ச்சியில் தகுந்த இடைவெளியை பின்பற்றி, கங்கோத்திரி மந்திர் சமீதி தலைவர் சுரேஷ் சேம்வால், பாஜக எம்.எல்.ஏ கோபால் சிங் ராவத் மற்றும் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
கரோனா தொற்று காரணமாக கங்கோத்திரி கோயில் நடை, தாமதமாக கடந்த ஜுலை மாதம் திறக்கப்பட்ட நிலையில், தற்போது வரை 23,500 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:
காற்றில் பறந்த தடை உத்தரவு, உ.பி.,யில் வரலாறு காணாத வகையில் உயர்ந்த காற்று மாசு!