அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளை மத்திய அரசு ஆண்டு முழுவதும் கொண்டாடிவருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று நடந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார். அப்போது அவர், "அமைதி, சமத்துவம் போன்ற காந்திய கொள்கைகளால்தான் உலக அளவில் அண்ணலுக்கு மரியாதை வந்து சேர்ந்தது. எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது அகிம்சை தேவைப்படுகிறது.
சமகால அரசியல் சவால்களை எதிர்கொள்ள மனித இனத்திற்கு காந்திய கொள்கை அவசியம். சக மனிதர்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றிடமும காந்திய மனப்பான்மையுடம் பழக வேண்டும். உலகில் உள்ள பெரும்பாலான பகுதிகள் பிரச்னைகளை சந்தித்துவருகின்றன. காலநிலை மாற்றத்தால் உலகமே பிரச்னையை சந்தித்துவருகிறது.
கிரகங்களின் எதிர்காலத்தை விஞ்ஞானிகள் கணித்துவருகின்றனர். எப்படி முன்னேற வேண்டும் என்பதை அண்ணல் வழிகாட்டியாக இருந்து கற்றுத் தந்துள்ளார். காந்தியின் கனவான சுத்தமான இந்தியாவை அடைய பிரதமர் மோடி மக்கள் இயக்கத்தை தொடங்கியுள்ளார். இதனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே நாம் காந்தியின் கனவை உணர்ந்துள்ளோம். திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் வெற்றி அடைந்துள்ளோம். இதற்கு அனைவருமே காரணம்" என்றார்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம்: மங்களூரு போராட்டத்தில் இருவர் உயிரிழப்பு!