ETV Bharat / bharat

காந்தி 150: காந்தியின் பார்வையில் இந்திய விடுதலை - Gandhi'd Swaraj in tamil

காந்தியின் கை ராட்டை வாளை விட கூர்மையானது, காந்தியின் உடலைச் சுற்றியிருக்கும் அந்த எளிய துணியை எப்பேர்ப்பட்ட வீரனின் துப்பாக்கியிலிருந்து வரும் தோட்டக்களாலும் துளைக்க முடியாது, காந்தியின் ஆடு ஆங்கிலேயர்களின் சிங்கத்தை விட மிக வலிமையானது.

Gandhi 150
author img

By

Published : Aug 29, 2019, 2:20 PM IST

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை, ஒரு சம்பிரதாயமாக மட்டுமே தேசம் கொண்டாடி வருகிறது. நாடு சுதந்திரமடைந்து சுமார் 73 ஆண்டுகளாக நாம் காந்திய கொள்கைகளை முற்றிலும் புறக்கணித்துவிட்டு வாழ்ந்திருக்கிறோம்; அதனால் தேசத்தின் எதிர்காலம் குறித்த கவலை, காந்தியின் 150ஆவது பிறந்தநாளைக் கொண்டாடப்போகும் இந்த வேளையில் பலரின் மனதிலும் நிறைந்துள்ளது. மிக ஆடம்பர வாழ்கையை நாம் வாழும் இந்த உலகமயமாக்கல் நிறைந்த சமூகத்தில் காந்திய சிந்தனைகளைப் பற்றி ஒருவன் பேசினாலே, அவன் நாகரிகமற்றவன் என்றும் காட்டுமிராண்டி என்றும் எளிதில் முத்திரை குத்தப்படலாம்.

ஆனால் 20ஆம் நூற்றாண்டுக்குப் பின் பிறந்த இளைய தலைமுறையினருக்குக் காந்திய கொள்கைகளையும் சிந்தனைகளையும் அறிவதற்குக் கண்டிப்பாக ஆர்வம் காட்டுவார்கள். இளைய தலைமுறையினர் கடின உழைப்பின் மூலம் தங்கள் இலக்குகளை அடைவதற்கு அவசரம் காட்டலாம்.

ஆனால் அவர்கள் சமூகத்தில் பிரச்னை ஏற்படும்போது, தாமதமின்றி தேவையான திருத்தங்களை மேற்கொள்ள நமது கலாச்சாரத்தின் வேர்களையும் இந்த சமூகத்தின் அடித்தளங்களையும் அறிந்துகொள்ள இளைய தலைமுறையினர் கண்டிப்பாக ஆர்வத்துடனே இருப்பார்கள்.

Gandhi 150, காந்தி 150
மக்களுக்கான காந்தி

20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவுஜீவிகளாகக் கருதப்பட்ட ஐன்ஸ்டீன், ரஸ்ஸல், பெர்னார்ட் ஷா என அனைவரும் காந்தியடிகளை மனித குலத்தில் ஏற்படும் பிரச்னைக்கான தீர்வைத் தரும் கலங்கரை விளக்கமாகவே கண்டனர். இதை அறியும்போது, இளைய தலைமுறையினர் கண்டிப்பாகப் பெருமையடைவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

புத்தரைப் போல், இயேசுவைப் போல், காந்தியடிகளும் ஏழை எளியவர்களுக்காகவே இறுதிவரை வாழ்ந்தார். அரபுக் கவிஞர் மிகைல் நொய்மா காந்தியடிகளைப் பற்றிக் கூறுகையில், “காந்தியின் கை ராட்டை வாளை விட கூர்மையானது, காந்தியின் உடலைச் சுற்றியிருக்கும் அந்த எளிய துணியை எப்பேர்ப்பட்ட வீரனின் துப்பாக்கியிலிருந்து வரும் தோட்டக்களாலும் துளைக்க முடியாது, காந்தியின் ஆடு ஆங்கிலேயர்களின் சிங்கத்தை விட மிக வலிமையானது.” என்றார்.

Gandhi 150, காந்தி 150
மக்களுடன் காந்தி

இந்தியா சுதந்திரம் அடைந்து ஏழு தலைமுறை ஆன பின், தற்போது இளைய தலைமுறையினர் நம்மிடம் கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும். மகாத்மா காந்தியும் பிற தலைவர்களும் போராடிய சுதந்திரம் இதுதானா? இதைத்தான் ஆகஸ்ட் 15, ஜனவரி 26 என இருமுறை நாம் கொண்டாடுகிறோமா? அக்டோபர் 2ஆம் தேதியும் ஜனவரி 30ஆம் தேதியும் காந்தியின் சிலை முன் அரசியல் தலைவர்கள் என்னதான் செய்கிறார்கள்? காந்தி முன்வைத்த குடியரசும் விடுதலையும் என்ன? காந்தியடிகள் இப்போது நம்முடன் இருந்திருந்தால் அவர் உண்மையில் அகமகிழ்ந்திருப்பாரா? போன்ற கேள்விகளுக்கான பதில்களை நாம் கண்டிப்பாகக் கூற வேண்டும்

காந்தியடிகள் முன்வைத்த சுயராஜ்ஜியம் என்பது சமூகத்தில் பலவீனமானவர்களுக்கு அதிகாரமளித்தல் என்று அவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். நாட்டில் சுமார் 33 கோடி பேர் இன்னும் வறுமைக் கோட்டுக்குக் கீழ்தான் இருக்கிறார்கள். "சுயகட்டுப்பாடும்" "சுய ஒழுக்கமுமே" உண்மையான சுதந்திரமே தவிர, தற்போது அரசாங்கம் எங்கும் ஊடுருவி வரும் பேராசையும் சுயநலமும் இல்லை என்றார் காந்தி.

எளிய வாழ்க்கையை வாழச் சொன்ன காந்திய கொள்கைகளைப் பற்றி பிரிட்டிஷ் தத்துவவாதி ஆல்டஸ் ஹக்ஸ்லி கூறுகையில், "இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதையும் 'தொழில்நுட்பமும், அரசாங்கம் போன்ற அமைப்புகளும் மனிதர்களை மனிதநேயமற்ற ஒரு விலங்காக மாற்றக்கூடும். மேலும் எந்தவொரு தொழில்நுட்பத்தைக் கொண்டும் நாம் ஆன்மாவை உணர முடியாது" என்றார்.

Gandhi 150, காந்தி 150
அண்ணல் காந்தியடிகள்

1983ஆம் ஆண்டு ஒரு குளிர் நிரம்பிய இரவில் தென்னாப்பிரிக்காவில் ரயிலிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டதிலிருந்து, ஜனவரி 30, 1948ஆம் ஆண்டு ஒரு துரோகியால் சுட்டுக்கொல்லப்பட்டதுவரை காந்தி வன்முறை, பேராசை, அநீதி, சுரண்டல்களுக்கு எதிரான போரைத் தொடர்ந்து நடத்திவந்தார். மனித வரலாற்றிலேயே காந்தியடிகளைப் போல எந்த ஒரு நபரும் துன்பப்பட்டிருக்கவும் முடியாது, தியக்கங்களைச் செய்திருக்கவும் முடியாது.

அதனால்தான் காந்தியடிகள் வாழ்ந்த வாழ்கையைப் பற்றி தெரிந்துகொண்ட நம் இளைய தலைமுறையினர் முதல் ஐன்ஸ்டீன் வரை அனைவரின் கண்களிலிருந்தும் கண்ணீர் நிச்சயம் வரும். அண்ணல் காந்தியடிகளுக்கு நாம் எவ்வளவு தூரம் கடன்பட்டுள்ளோம் என்று நாம் கண்டிப்பாக நமது அடுத்த தலைமுறையினருக்குக் கூறவேண்டும். அதில் ஒருவருக்கும் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்கப்போவதில்லை.

Intro:Body:

Gandhi 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.