சவுதி அரேபிய மன்னரும், இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலருமான முகமது சல்மான் பின் அப்துல்லாசிஸ் மரணித்துவிட்டார் அல்லது படுத்தப்படுக்கையாக உள்ளார் என்பன போன்ற செய்திகள் ஈரானிய ஊடகங்களில் வெளியாகின.
இந்தச் செய்திகளை பொய்யாக்கும் வகையில் இரண்டு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் புதிதாக நியமிக்கப்பட்ட தூதர்களை மன்னர் சல்மான் நின்று வாழ்த்துவது போல் உள்ளது.
இதுமட்டுமின்றி கடந்த 5ஆம் தேதி ரியாத்தில் மன்னரை பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் உடன் சந்தித்தார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
சவுதி அரச குடும்பத்தில் அடுத்த மன்னர் பதவிக்கு போட்டிகள் நடப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன.
தற்போதைய பட்டத்து இளவரசர், போட்டியிலுள்ளவர்களை வெளியேற்றிவருகிறார் என்ற தகவலும் வருகிறது. இச்சூழலில் மன்னர் சல்மான் இறந்துவிட்டதாகச் செய்திகள் பரவியது சர்வதேச அளவில் கவனம் பெற்றது.
எனினும் மன்னரின் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ எவ்வித அறிக்கையோ வேறு தகவலோ இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிங்க: சவுதி அரேபிய மன்னர் மரணம்? ஈரானிய ஊடகங்கள் தகவல்!