மக்களவைத் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி மக்களுக்கு அளித்த முக்கியமான வாக்குறுதிகளில் அனைத்து வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதும் ஒன்றாக இருந்தது. இதற்காக பாஜகவின் தேர்தல் அறிக்கையில் 'ஜல் ஜீவன் மிஷன்' இடம்பெற்றது.
இந்த மிஷன் மூலம் 2024ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் பைப் மூலம் சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்வது முக்கிய வாக்குறுதியாக அளிக்கப்பட்டது. எனவே அளித்த வாக்குறுதிபடி 'ஜல் சக்தி' என்ற அமைச்சகம் உறுவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சகத்துக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டு இதன் அமைச்சராக கஜேந்திர சிங் ஷெகாவத் பொறுப்பெற்றுள்ளார்.
முன்னதாக இருந்த நீர்வள அமைச்சகத்தை நீக்கிவிட்டு இந்த அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க நாட்டின் ஆறுகளை இணைக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தார். இதன் மூலம்தான் ஜல் சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. கங்கை ஆற்றை சுத்தம் செய்வதற்காக 2014 ஆண்டு உருவாக்கப்பட்ட அமைச்சகமும் இந்த முறை நீக்கப்பட்டுள்ளது.