கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 24 ஆயிரத்து 850 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், உலகில் கரோனா தொற்று அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் ரஷ்யாவை முந்தி 3ஆவது இடத்திற்கு இந்தியா சென்றுள்ளது. இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள ராகுல் காந்தி, மத்திய அரசு கரோனாவைக் கையாளுவதில் தோல்வியடைந்துள்ளதாக விமர்சித்திருக்கிறார்.
அதில், வருங்காலங்களில் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தின் வர்த்தகக் குழு ஆய்வுகள், கோவிட்-19 கையாளுதல், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றைச் செயல்படுத்தியதில் மோடி அரசு அடைந்த தோல்விகள் குறித்து இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதனுடன் பிரதமர் மோடி பேசும் வீடியோ ஒன்றையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
-
Future HBS case studies on failure:
— Rahul Gandhi (@RahulGandhi) July 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
1. Covid19.
2. Demonetisation.
3. GST implementation. pic.twitter.com/fkzJ3BlLH4
">Future HBS case studies on failure:
— Rahul Gandhi (@RahulGandhi) July 6, 2020
1. Covid19.
2. Demonetisation.
3. GST implementation. pic.twitter.com/fkzJ3BlLH4Future HBS case studies on failure:
— Rahul Gandhi (@RahulGandhi) July 6, 2020
1. Covid19.
2. Demonetisation.
3. GST implementation. pic.twitter.com/fkzJ3BlLH4
அந்த வீடியோவில், ”மகாபாரதப் போரை முடிக்க 18 நாள்கள் தேவைப்பட்டன. அதேபோல, இந்தக் கரோனாவை ஒழிக்க 21 நாள்கள் போதும்” என பிரதமர் பேசுவது உள்ளது. மத்திய அரசு கரோனாவைக் கையாளுவதில் தோல்வியடைந்ததை உணர்த்த கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை உயர்ந்ததை விளக்கும் வரைபடமும் அந்த வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பேசும் படங்கள்... வீரர்களை நலம் விசாரித்த மோடி - மன்மோகன் சிங்கை ஒப்பிட்ட ப. சிதம்பரம்