ETV Bharat / bharat

தியாகிகள் உதவித்தொகையை அதிரடியாக உயர்த்திய முதலமைச்சர்! - அதிகரிப்பு

புதுச்சேரி: தியாகிகள் கவுரவிப்பு நிகழ்ச்சியில், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தி, முதலமைச்சர் நாராயணசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

cm narayanasamy
author img

By

Published : Aug 16, 2019, 10:25 PM IST

புதுச்சேரி மாநிலத்தில் 73ஆவது சுதந்திர தினத்தையொட்டி செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில், தியாகிகள் கவுரவிப்பு நிகழ்ச்சி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி , இனிப்புகள் வழங்கப்பட்டன.

அப்போது பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் நம்முடைய தியாகிகள் பிரெஞ்சு அதிகாரிகள் வெளியேற வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள். புதுச்சேரி 1954ஆம் ஆண்டு அதிகாரத்தை பெற்றாலும், 1964ஆம் ஆண்டில் தான் முழுமையான அதிகாரத்தை பெற்றது. துணைநிலை ஆளுநருடன் தேநீர் அருந்த செல்ல விருப்பமில்லை; சம்பிரதாயம் காரணமாகவே சென்றோம் என்று தெரிவித்தார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சிறப்புரை

மேலும், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தியாகிகளுக்கு இதுவரை வழங்கி வந்த உதவித்தொகை ரூ.8 ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு, ரூ.9 ஆயிரமாக வழங்கப்படும் என அறிவித்தார்.

Intro:தியாகிகளுக்கு 1000 ரூபாயை கூடுதலாக உயர்த்தப்படும் என தியாகிகள் கவுரவிப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.....

Body:புதுச்சேரி 16-08-19
தியாகிகளுக்கு 1000 ரூபாயை கூடுதலாக உயர்த்தப்படும் என தியாகிகள் கவுரவிப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.....

புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் சுதந்திர திருநாளையொட்டி தியாகிகள் கவுரவிப்பு நிகழ்ச்சி கம்பன் கலையரங்களில் நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி , இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்.

தொடர்ந்து அவர் சிறப்புரை ஆற்றினார். இதில் புதுச்சேரியில் நம்முடைய தியாகிகள் பிரெஞ்சு அதிகாரிகள் வெளியேற வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள். புதுச்சேரி 1954ல் அதிகாரத்தை பெற்றாலும் கூட, 1964ல் தான் முழுமையான அதிகாரத்தை பெற முடிந்தது. ரங்கசாமி முதல்வராக இருந்தபோது வாங்கிய கடன் 400கோடி ரூபாய் ஆண்டு ஆண்டுக்கு தற்போது கட்டப்பட்டு வருகின்றது. துணைநிலை ஆளுநருடன் தேநீர் அருந்த செல்லவில்லை.சம்பிரதாயம் காரணமாகவே சென்றோம் என்று கூறிய அவர் ஒரு புறம் மத்திய அரசின் நெருக்கடி மறுபுறம் ஆளுநர் மூலம் தடைகள் பல இவைகளை தாண்டி வளர்ச்சி பாதையில் அரசு சென்று வருகின்றது என்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தியாகிகளுக்கு இதுவரை வழங்கி வந்த ரூ.8000 ஐ ரூ.1000 உயர்த்தி ரு.9 ஆயிரமாக வழங்கப்படும் என அறிவித்தார்.

பேச்சு - நாராயணசாமி - முதலமைச்சர் .Conclusion:தியாகிகளுக்கு 1000 ரூபாயை கூடுதலாக உயர்த்தப்படும் என தியாகிகள் கவுரவிப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.....

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.