டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தன் சுதந்திர தின உரையில், பெண்கள் மெட்ரோ ரயிலில் அக்டோபர் 29ஆம் தேதி முதல் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டார். இதற்காக, ரூ 290 கோடி ஒதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் குப்தா, "நீங்கள் மக்களுக்கு இலவசமாக கொடுத்தால், அது பிரச்னையாக மாறுவதற்கு வாய்ப்புண்டு. இலவச திட்டங்களால் பிரச்னைகள் உருவாகும். மாநில அரசுகளின் பொறுப்பில்தான் போக்குவரத்துத்துறை இருக்கிறது. இதனால் ஏற்படும் இழப்புகளை மாநில அரசு ஏற்றுக் கொண்டால் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.
மெட்ரோவை அமைக்கும் நான்காம் கட்ட திட்டத்தின் செலவை மத்திய, மாநில அரசுகள் சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும். நான்காம் கட்ட திட்டத்தில் சிறிதளவு தாமதம் கூட ஏற்படக்கூடாது" என்றார்.