இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கோவிட் -19 பரவலைத் தடுக்க மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு நடைமுறையில் உள்ள இந்த நேரத்தில், பிரதான் மந்திரி கரிப் அன்ன யோஜனா (பி.எம்.ஜி.ஏ) திட்டத்தின் கீழ் மக்களுக்கு உணவு தானியங்களை வழங்கும் பொறுப்பு இந்திய உணவுக் கழகத்திடம் (எப்.சி.ஐ) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு தானியங்கள் வழங்குவது மே 15ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொது விநியோக முறையின் கீழ் ரேஷனை விநியோகிக்க வேண்டும். நாட்டில் உணவு தானியங்களுக்கு பஞ்சமில்லை. இந்திய உணவுக் கழகத்திடம் ஏறத்தாழ 671 லட்சம் டன் உணவு தானியங்கள் இருப்பில் உள்ளன.
23 மாநிலங்களில் ‘ஒன் நேஷன், ஒன் ரேஷன் கார்டு’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த 23 மாநிலங்களைச் சேர்ந்த 83 விழுக்காடு மக்களை அதாவது, 67 கோடி பயனாளர்களுக்கு இந்த திட்டம் சென்றடைய ஏற்பாடு செய்யப்படும். 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், இந்த திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்படும். 'ஒன் நேஷன், ஒன் ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ், நாட்டில் வாழும் எந்தவொரு நபருக்கும் ஒரே ரேஷன் அட்டை இருக்கும், மேலும் நாட்டில் எங்கிருந்தும் ரேஷன் எடுக்க முடியும். எந்தவொரு அரசாங்க ரேஷன் கடையிலிருந்தும் உணவு தானியங்களை குறைந்த விலையில் வாங்கி பயன்பெற முடியும்.
கோவிட்-19 பரவல் தடுப்பு ஊரடங்கையடுத்து மார்ச் முதல் வருமானம் இன்றி தவிக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர்களின், ஏழை எளிய மக்களின் அவல நிலையை அரசாங்கம் உணர்ந்துள்ளது. குடிபெயர்ந்தோரின் எண்ணிக்கை தற்போது எட்டு கோடியை தாண்டியுள்ளதாக அரசின் புள்ளிவிவரம் கூறுகின்றன. எனவே, அவர்களுக்கு கூடுதல் தானியங்களை வழங்குவற்கு மத்திய அரசு தயாராக உள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் பயனாளர்களின் மொத்த எண்ணிக்கையில் 10 விழுக்காடு அடிப்படையில் கூடுதல் தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து செலவு, விநியோகஸ்தர்களின் செலவீனம் உள்ளிட்ட விநியோகத்திற்கான முழு செலவையும் மத்திய அரசு ஏற்கும்.
பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை, எளிய மக்களின் நலனுக்காக இந்த செயல்முறையை விரைவுப்படுத்துமாறு அவர்களை வலியுறுத்துகிறேன். இந்தக் கடினமான காலத்தில் ரேஷன் உணவுப் பொருள்களை விநியோகிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு. உணவுப்பொருள்களை அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கும் தானியங்களை ரேஷன் வழியாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க : “உணவுப் பொருள்களை விநியோகிப்பதில் மாநில அரசுகள் அக்கறையோடு செயல்படவில்லை ” - பாஸ்வான்