கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் பலரும் தங்களது வேலைகளை இழந்து அத்தியாவசிய தேவைகளுக்கு அரசை எதிர்பார்த்துவருகின்றனர்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசின் அனைத்து உதவிகளும் சென்றடைய வேண்டும் எனவும், மத்திய அரசு அறிவித்துள்ள பிரதமரின் ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்கும் திட்டத்தின்கீழ் மாநிலத்திலுள்ள அனைத்து மக்களும் பயன்பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த மூன்று மாதங்களுக்கு மாநிலத்திற்குத் தேவையான நியாயவிலைக் கடை பொருள்கள் குறித்து மத்திய உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானை மாநில அரசு தொடர்புகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், நியாயவிலைக் கடை பொருள்கள் கள்ளச் சந்தைகளில் விநியோகிக்கப்படாத வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அடுத்த மூன்று மாதங்களுக்கு விலையில்லா ரேஷன் பொருள்கள் - மத்திய அமைச்சர்