புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாண்யேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்துவருகின்றனர்.
இந்த நிலையில் சொந்த நிலம் வைத்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குப் புதுச்சேரி அரசு இலவச மின்சாரம் வழங்கிவருகிறது. அதேபோன்று கோயில் நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகளும் இலவச மின்சாரம் கேட்டு அரசுக்கு கோரிக்கைவைத்தனர்.
அதனையடுத்து புதுச்சேரி வேளாண், கல்வி, மின் துறை அமைச்சர் கமலக்கண்ணன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஒப்புதல் பெற்று, இன்று (அக்டோபர் 21) திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான நிலங்களில் சாகுபடி செய்யும் நிலத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
அத்திப்படுகை கிராமத்தில் புதிதாக மின் இணைப்பு வழங்கப்பட்ட குழாய் கிணற்றினை மின்துறை அமைச்சர் கமலக்கண்ணன் இயக்கிவைத்தார்.
அப்போது விவசாயிகளிடம் கமலக்கண்ணன் கூறியதாவது, புதுச்சேரி அரசு தமிழ்நாடு உள்ளிட்ட வெளிமாநிலங்களில் பணம் கொடுத்து மின்சாரம் வாங்குகின்றது.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கான பணத்தை புதுச்சேரி அரசு செலுத்திவருகிறது. ஆகையால் விவசாயிகள் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள்விடுத்தார்.
கோயில் நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
புதுச்சேரி: கோயில் நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பை அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கிவைத்தார்