கரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளது. இதனால், புதுச்சேரியின் காரைக்காலில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், காரைக்கால் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக பூட்டி வைக்கப்பட்டிருந்த மதுபானக் கடைகளிலிருந்து சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, ஊரடங்கு அமலில் இருக்கும்போது சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்ற நான்கு மதுபானக் கடைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தினர், காவல் துறையினர் சீல் வைத்தனர். மேலும், சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்காக காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஆதாஷ் உத்தரவின் பேரில் காவல் துறையினர் 7 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.
தற்போது காரைக்கால், டிஆர் பட்டினம், வாஞ்சூர், சந்திரபாடி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து மதுபானக் கடைகளிலும் உள்ள இருப்புகளை கணக்கெடுத்து சீல் வைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 144 தடை உத்தரவு: வீட்டில் கள்ளச்சாராயம் விற்பனை...மூன்று பேர் கைது