ETV Bharat / bharat

விகாஸ் துபே கூட்டாளிகள் நான்கு பேர் கைது: 14 துப்பாக்கிகள் பறிமுதல்! - விகாஸ் துபே கூட்டாளிகள் கைது

பரீதாபாத்: விகாஸ் துபேவின் கூட்டாளிகள் நான்கு பேரை மத்தியப் பிரதேச சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 14 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

pisto seized
pisto seized
author img

By

Published : Jul 9, 2020, 9:35 AM IST

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஸ் துபேவை ஜூலை 2ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது, ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எட்டு காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சியினர் தங்களது கருத்துகளை தெரிவித்து வன்மையாக கண்டித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, விகாஸ் துபேவை பிடிக்க சிறப்புக் குழுக்கள் அமைத்தது. இந்நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முன்கூட்டியே விகாஸிடம் தகவல் தெரிவித்த சவுபேபூரின் ஆய்வாளர் வினய் திவாரி, துணை ஆய்வாளர் கே.கே. சர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, சவுபேபூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த 68 காவல்துறையினர் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபேவின் கூட்டாளிகள் அக்னி கோத்ரி, பிரேம் பிரகாஷ் பாண்டே, அதுல் துபே, விகாஸின் நெருங்கிய உறவினர் சாமா, விகாஸ் துபே வீட்டில் பணிபுரிந்த ரேகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கான்பூர் மற்றும் பரிதாபாத் பகுதியில் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் (எஸ்.டி.எப்) நடத்திய தேடுதல் வேட்டையின்போது, காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற விகாஸின் கூட்டாளி அமர் துபே காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இன்று வரை காவல்துறையின் பிடியில் சிக்காமல் தப்பித்து வரும் விகாஸ் துபே, நேற்று முன்தினம் (ஜூலை 7) அவரது உறவினர் வீட்டில் தங்கி விட்டு, அருகிலிருக்கும் ஹோட்டலில் தங்குவதற்கு திட்டமிட்டார்.

விகாஸ் துபே ஹோட்டலுக்குள் செல்லும் காட்சி அங்கிருக்கும் சிசிடிவில் பதிவாகியுள்ளது. தகவலறிந்து காவல்துறையினர் அங்கு செல்லும் முன்பே காவல்துறையின் கண்ணில் மண்ணை தூவி, விகாஸ் துபே தப்பிச் சென்றுவிட்டார். இதனையடுத்து, பரிதாபாத்தில் காவல்துறை அதிரடிப்படை துபேவின் கூட்டாளிகளான நான்கு பேரை கைது செய்தது.

இதுகுறித்து எஸ்.டி.எஃப் அலுவலர் எம்.டி.எஸ். சயத் கூறுகையில், "காண்ட்வா சாலை அருகே சோதனை நடந்து கொண்டிருந்தபோது குற்றவாளி தப்பிக்க முயன்றார். இந்தச் சூழலில் அங்கிருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 14 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என தெரிவித்தார்.

மேலும், விகாஸ் துபே பிடிக்க துப்பு கொடுத்தால் 2 லட்சத்து 50ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்த நிலையில், அதனை 5 லட்சமாக உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: 21 நாடுகளைச் சேர்ந்த 91 தப்லிக் ஜமாஅத் உறுப்பினர்களுக்கு டெல்லி நீதிமன்றம் பிணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.