நேற்று வட காஷ்மீர் பகுதியிலுள்ள குப்வாரா மாவட்டத்தின் டங்தார் என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் இரு பாதுகாப்புப் படைவீரர்கள் சிக்கிக்கொண்டனர். பனிச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணிகள் செவ்வாய்கிழமை மாலை வரை நடைபெற்றது. ஆனால், பின்னர் மோசமான வானிலை காரணமாக தேடும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் இன்று காலை முதல் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
அதேபோல, பண்டிபோரா மாவட்டத்தின் குரேஸ் செக்டர் அருகேவுள்ள தாவர் பகுதியில் ஏற்பட்ட மற்றொரு பனிச்சிரிவில் இரு பாதுகாப்புப்டை வீரர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
காஷ்மீர் பகுதியில் சமீப காலங்களாக ஏற்படும் பனிச்சிவுகளில் பாதுகாப்புபடை வீரர்கள் சிக்கிக்கொள்வது தொடர்கதையாகிவருகிறது.
இதையும் படிங்க: சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 வீரர்கள் உயிரிழப்பு; 7 பேர் படுகாயம்