புதுச்சேரியில் புதிதாக நான்கு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 ஆக உய்ந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குனர் மோகன் குமார் இன்று வீடியோ காணொலி மூலம் பேட்டியளித்துள்ளார்.
அதில், "புதுவையில் 46 பேர் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் குரும்மம்பேட் பகுதியை சேர்ந்தவர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் மேலும் மேலும் நான்கு பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது
ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி மற்றும் அன்னை தெரசா நகரை சேர்ந்த ஒருவரும் சென்னையில் வசிக்கும் ஒவ்வொருவரும் என நான்கு பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49ஆக அதிகரித்துள்ளது. ஐந்தாம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே பொது மக்கள் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் இதனை 50 விழுக்காடு பேர் கடைப்பிடிப்பதில்லை" என்றார்.