ஜம்மு காஷ்மீரின் கிலூரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக ஜம்மு காஷ்மீர் காவலர்களுக்கு துப்பு கிடைத்த நிலையில், சோப்பியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று (ஆக. 28) காவல் துறையினருடன் சேர்ந்து ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. தொடர்ந்து, இருதரப்பினருக்கும் இடையே நடந்த தீவிர துப்பாக்கிச் சண்டையில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இந்த மோதலில் பாதுகாப்புப் படையினர் யாருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. மேலும், அங்கு பல பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதால், பாதுகாப்புப் படையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: லாலுவின் பிணை மனு மீதான விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்!