ETV Bharat / bharat

ஆண் நண்பருடன் பேசியதால் மாணவியின் முடியை வெட்டிய குடும்பத்தினர்! - மொட்டையடிக்கப்பட்ட மாணவி

போபால்: ஆண் மாணவர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியதால் சந்தேகம் அடைந்த மாணவியின் குடும்பத்தினர், அச்சிறுமியின் தலைமுடியை வெட்டிய கொடூரம் அரங்கேறியுள்ளது.

Family beats minor girl
Family beats minor girl
author img

By

Published : Mar 1, 2020, 12:01 AM IST

மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூரில் அருகேவுள்ள சோண்ட்வா என்ற பகுதியில் வசிக்கும் சிறுமி ஒருவர், தன்னுடன் படிக்கும் ஆண் மாணவர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அச்சிறுமியின் குடும்பத்தினர், அப்பெண்ணை கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

இத்துடன் விட்டுவிடாமல், அப்பெண்ணின் தலைமுடியையும் வெட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து காவல்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "தனது குடும்ப உறுப்பினர்கள் சிலர், தன்னை பிரம்பால் அடித்து துன்புறுத்துவதாகவும் தனது தலைமுடியை வெட்டி கொடுமைப்படுத்துவதாகவும், சிறுமி காவல் துறையினரிடம் புகாரளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.

இதையும் படிங்க: டெல்லி கலவரம் - கார்ட்டூன் மூலம் இதயங்களை வென்ற அமுல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.