கரோனா லாக்டவுன் எதிரொலியாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு பலநூறு மைல்கள் கால்நடையாக படையெடுத்து செல்லும் அவலம் நிலவிவருகிறது. இதனால், பலர் உயிரிழக்கும் அசம்பாவிதமும் அவ்வப்போது நடைபெறுகிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையை பயன்படுத்தி விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான யஷ்வந்த் சின்ஹா டெல்லி காந்தி நினைவிடத்தில் இன்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பின்னர், இன்று மாலை அவர் விடுவிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் : மம்தா பானர்ஜி அறிவிப்பு