இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் நேருவின் நினைவு தினத்தையொட்டி, கடற்கரை சாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து, விவசாயத்துறை அமைச்சர் கமலக்கண்ணன், சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன் உள்ளிட்டோரும் நேரு சிலைக்கு மாலை அணிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை அம்மாநில செய்தி, விளம்பரத்துறை செய்திருந்தது.
![முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம், முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pud-01-nehru-aniversary-cm-funct-7205842_27052020122605_2705f_1590562565_169.jpg)
முன்னதாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், நேருவின் நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில், கட்சித் தலைவர் சுப்பிரமணியம், முதலமைச்சர் நாராயணசாமி, கட்சித் தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க : புதுச்சேரி அரசுக்கு நிதி வழங்க வேண்டும் - நாராயணசாமி கோரிக்கை