இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், நண்பர்களுடன் சேர்ந்து ரியல் எஸ்டெட் தொழில் செய்து வருகிறார். சமீப காலமாக இவர் தனது நண்பர்கள் மற்றும் பிரபலங்களுடன் கோல்ப் விளையாடி வருகிறார். இந்நிலையில், கபில் தேவ், தெலங்கானா தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தாரக ராமா ராவை இன்று ஹைதராபாத்தில் சந்தித்தார்.
வருகின்ற டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள உலகளவிலான கோல்ப் போட்டிக்கு அனுமதி கேட்டும், ஆதரவு கேட்டும் கபில் தேவ் இன்று அமைச்சரை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலங்கானா முதலமைச்சரின் மகனும் தகவல் தொழில் நுட்ப அமைச்சருமான தாரக ராமா ராவும் கோல்ப் விளையாட்டில் ஆர்வமுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாரதா சிட்பண்ட் மோசடி - ராஜிவ்குமாரின் முன்ஜாமினை ரத்து செய்யக்கோரிய விசாரணை ஒத்திவைப்பு!