குஜராத்தின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் சங்கர் சிங் வகேலா (வயது 80). இவர் நான்கு முறை மக்களவை எம்பியாகவும், ஒரு முறை மாநிலங்களவை எம்பியாகவும் பதவி வகித்துள்ளார்.
இவருக்கு முன்னதாக கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்ததால் வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மருத்துவரின் அறிவுரையின் பேரில் சங்கர் சிங் இன்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.