வயது மூப்பு பிரச்னையால் கோவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் டெல்லி காவல் ஆணையர் வேத் மார்வா நேற்று காலமானார். அவருக்கு வயது 87. மிசோரம், ஜார்க்கண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஆளுநராகவும், அவர் பொறுப்பு வகித்துள்ளார். கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரை டெல்லி காவல் ஆணையராகவும், 1988 ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை தேசியப் பாதுகாப்பு படையின் இயக்குநராகவும் அவர் செயல்பட்டுள்ளார்.
கடைசி பத்து நாள்களாக உடல்நலக்குறைவுக் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இரவு 8:30 மணி அளவில் காலமானார். பாகிஸ்தான் பெஷாவர் நகரில், கடந்த 1934ஆம் ஆண்டு மார்வா பிறந்தார். இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு அவரின் குடும்பம் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தது.
-
We are deeply saddened at the loss of a great leader of the police force. Sh. Ved Marwah, IPS led the force from the front through difficult times and served as a Governor to 3 states. Our thoughts and prayers are with the family. @goacm pic.twitter.com/fBn5QnRSr7
— DGP_Goa (@DGP_Goa) June 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We are deeply saddened at the loss of a great leader of the police force. Sh. Ved Marwah, IPS led the force from the front through difficult times and served as a Governor to 3 states. Our thoughts and prayers are with the family. @goacm pic.twitter.com/fBn5QnRSr7
— DGP_Goa (@DGP_Goa) June 5, 2020We are deeply saddened at the loss of a great leader of the police force. Sh. Ved Marwah, IPS led the force from the front through difficult times and served as a Governor to 3 states. Our thoughts and prayers are with the family. @goacm pic.twitter.com/fBn5QnRSr7
— DGP_Goa (@DGP_Goa) June 5, 2020
டெல்லி காவல்துறையின் பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர், பீகார் மாநிலங்களின் ஆளுநர்களுக்கு ஆலோசகராகவும் அவர் இருந்துள்ளார். அவரின் மறைவுக்குப் பல்வேறு தலைவர்கள் இரங்கல்கள் தெரிவித்துவருகின்றனர். "Uncivil Wars: Pathology of Terrorism in India" என்ற புத்தகத்தை அவர் எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: கேரள யானை உயிரிழப்பு; குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்