கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் வித்யா நகரில் அம்மாவட்ட ஆட்சியர் சஜித் பாபுவின் குடியிருப்பு உள்ளது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பின் பக்கத்துவீட்டில் இன்று(அக்.6) அதிகாலை சந்தேகத்திற்கு இடமாக லாரியில் பொருள்கள் ஏற்றப்பட்டன.
அதைக் கண்ட மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் லாரியில் சந்தன மரக்கட்டைகள் கடத்திச் செல்லவிருந்தது தெரியவந்தது. உடனே அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வனத்துறை அலுவலர் ஒருவர், "மொத்தம் 28 மூட்டை சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ. 2 கோடி. அவை வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் அப்தூல் காதர் என்பவரிடம் விசாரணை நட்ததி வருகிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சந்தன மரம் கடத்திய இருவருக்கு அபராதம்: இருவர் தப்பியோட்டம்!