உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியில் வன விலங்குகள் கடத்தி விற்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதையடுத்து வன விலங்கு குற்றத்தடுப்புப் பிரிவு அலுவர்கள், உத்தரப்பிரதேச மாநில சிறப்புக் காவல் படையினருடன் அதிரடி சோதனையை இன்று நடத்தினர்.
இச்சோதனையில், 500க்கும் மேற்பட்ட கிளிகளைக் கடத்திய 6 பேர் கொண்ட கும்பல் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டது. இதில் பெண் ஒருவரும் அடக்கம். உத்தரப்பிரதேச மாநிலம், பஹ்ராய்ச் பகுதியிலிருந்து கோரக்பூர் பகுதியில் இக்கும்பல் தொடர் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது.
இவர்களிடம் கூண்டில் அடைக்கப்பட 500க்கும் மேற்பட்ட கிளிகளைப் பறிமுதல் செய்த சிறப்புக் காவல் படையினர், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களின் பின்னணி குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு!