உத்தரப் பிரதேசத்தில், ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த கேம்லி அலைன் என்பவர் இந்திய ரூபாய் நோட்டுகளை, தனது மேஜிக் திறமையால் அமெரிக்க டாலர்களாக மாற்றுவதாக அங்குள்ள மக்களிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பி நொய்டாவைச் சேர்ந்த ஒரு நபர், கேம்லியிடம் பத்து லட்சம் ரூபாய் பணத்தைக் கொடுத்துள்ளார். இவரிடம் பணத்தைப் பெற்ற கேம்லி அலைன், பணத்தை டாலராக மாற்றாமல் வெள்ளை காகிதமாக திருப்பிக் கொடுத்து ஏமாற்றியுள்ளார்.
இதனால், தான் ஏமாற்றப்பட்டோம் என்று அறிந்த பின் அந்நபர் காவல் நிலையத்தில் கேம்லின் மீது புகாரளித்துள்ளார். அதனடிப்படையில் கேம்லி மீது வழக்குப் பதிந்த காவல் துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவருடைய கடவுச்சீட்டையும்(Passport) கைப்பற்றினர்.
மேலும் படிக்க: வருது புதிய 20 ரூபாய் நோட்டு