58 ஆண்டுகால இரகசிய வரலாற்றில் முதன்முறையாக, 'நிறுவனம் -22' அல்லது சிறப்பு எல்லைப் படை (SFF) ஆகஸ்ட் 29-30 இடைப்பட்ட இரவில் கிழக்கு லடாக்கின் ஆக்ஸிஜன் குறைந்த சிகரங்களில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் (PLA)க்கு எதிரான தனது படையினரின் திறன்களை சோதித்து பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.
ஆதிக்கம் செலுத்த வசதியான உயரமான இடங்களை ஆக்கிரமிக்க இரு தரப்பினருக்கும் இடையிலான ஒரு சூழ்ச்சிமிக்க போட்டியாக இது இருந்தது, மேலும் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டின் (LAC) வரையறுக்கப்படாத மண்டலத்தில் இருக்கும் இந்த பகுதியில் சிறப்பு எல்லைப் படை துணிச்சலாக செயல்பட்டது
ஆனால் ஐந்து பட்டாலியன் அல்லது சுமார் 5,000 வீரர் மற்றும் வீராங்கனைகள் அளவிற்கு வலுவான சிறப்பு எல்லைப் படையின் இந்த உயர்ந்த மலைப்பகுதி வீரர்களுக்கு, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் ஏற்பட்டால் இந்தியா-சீனா எல்லையில் செயல்பட வேண்டும் என்ற அவர்களின் பிரதான ஆணையின் முதல் பயிற்சியாகும்.
1971ல் பங்களாதேஷுக்கான விடுதலைப் போரில் அதன் சிறப்பான செயல்பாட்டிற்காக பெயரையும் புகழையும் பெற்றுள்ளதோடு, வெளிநாடுகளில் கெரில்லா வீரர்களை உருவாக்குவது உட்பட பல வெளிப்படையான மற்றும் இரகசியப் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், SFF என்பது பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில் வராத ஒரு தனித்துவமான அமைப்பாகும்..
SFF பல்வேறு போர்களிலும் மோதல்களிலும் ஈடுபட்டு, துணிச்சலான விருதுகளை வென்றிருந்தாலும், அவை விளம்பரப்படுத்தப்படவில்லை. மாறாக, புதுதில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடத்தப்படும் தனிப்பட்ட ரகசிய விழாக்களில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
டெஹ்ராடூனுக்கு அருகிலுள்ள சக்ரதாவை தலைமையிடமாகக் கொண்ட SFF-ன் பெரும்பாலான வீரர்கள் இராணுவ சிறப்புப் படைகள் அல்லது பராஸைச் சேர்ந்தவர்கள். அதே சமயம் இந்த கடுமையான வீரர், வீராங்கனைகள், பெரும்பாலும் கம்பா அல்லது கூர்க்கா பகுதியை சேர்ந்த திபெத்திய மலைவாழ் மக்களாக உள்ளனர்.
பிரதமர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் அமைச்சரவை செயலகத்தால் கட்டுப்படுத்தப்படும் SFF உலகின் மிகச் சிறந்த மலைப் போர் துருப்புக்களில் ஒன்றாகும்.
“ஆகஸ்ட் 29-30 சம்பவம், மே 5 சம்பவத்தின் போது PLA மறைமுகமாக ஃபிங்கர் 4 பகுதியில் நிலைகளை அமைத்ததற்கு ஒரு பதிலடியாக இருக்கலாம், அப்போது போங்கோங் சோ வடக்கு கரையில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட ஆதிக்கம் செலுத்தக்கூடிய மலைப்பாதையில் இருந்துதான் தற்போது சீன இராணுவம் வெளியேற மறுக்கிறது" என்று அதில் பணியாற்றும் ஒரு பாதுகாப்பு அதிகாரி ஈடிவி பாரத்-திடம் கூறினார்.
தற்போது இரண்டு பேரும் ஒரு விளையாட்டை விளையாட முடியும் என்பதை சீன இராணுவம் இப்போது அறிந்திருக்கும். சீன இராணுவம் ஆதிக்கம் செலுத்தும் இடத்தில் அதன் நிலைக்கு மிக அருகில் நமது நிலைகளை அமைத்தது அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பிரச்சினைக்குரிய பகுதி உண்மையான எல்லை கோடு பகுதியில், தனது தரப்பில் இருப்பதாக சீனா கூறுகிறது, அது இந்திய தரப்பில் இருப்பதாக இந்தியா கூறுகிறது. உண்மையான எல்லை கோடு பகுதி எது என்பதில் இரு தரப்பினரும் உடன்படவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது பல நிலையிலான உணர்வுகள் கொண்ட போர்.
ஆனால் 1962ஆம் ஆண்டு இந்தியா-சீனா போரின் போது மிச்சமிருந்த ஒரு கண்ணிவெடியில் சிக்கி, ஒரு மூத்த அதிகாரி உட்பட இரண்டு SFF வீரர்கள் தங்கள் உயிரை இழந்தனர்.
தற்செயலாக, 1962ஆம் ஆண்டு சீனாவுடனான போரில் கால்வான் பள்ளத்தாக்கு தவிர, பாங்கோங் சோவின் தென் கரையில் தான் நடவடிக்கைகள் அதிகமாக இருந்தது. தற்போது உரிமை கொண்டாடும் வடக்கு கரையில் எந்த நடவடிக்கையும் இல்லை.