ETV Bharat / bharat

’ஹைட்ரோகார்பன் திட்டத்தை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம்’- புதுவை முதலமைச்சர் - cm

புதுச்சேரி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரியில் அனுமதிக்க மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஹைட்ரோகார்பன் திட்டம் எதிர்ப்பு மனிதர் சங்கிலி போராட்டத்தின் போது தெரிவித்தார்

For any reason we will not allow the hydrocarbon project
author img

By

Published : Jul 16, 2019, 11:07 PM IST

புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, கூட்டணி கட்சிகளான ,கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இன்று அண்ணா சாலையில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிவா, வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

ஹைட்ரோகார்பன் திட்டம் எதிர்ப்பு மனிதர் சங்கிலி போராட்டத்தின் போது  முதல்வர் நாராயணசாமி
ஹைட்ரோகார்பன் திட்டம் எதிர்ப்பு மனிதர் சங்கிலி போராட்டத்தின் போது முதல்வர் நாராயணசாமி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மத்திய அரசு புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டு வர உள்ளதாக தெரிவித்து இருந்தது. இதற்கு புதுச்சேரி அரசு சார்பில் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என பெட்ரோலியத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். மேலும் வர உள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றப்படும்” என்றார்.

Intro:ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரியில் அனுமதிக்க மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல் நாராயணசாமி ஹைட்ரோகார்பன் திட்டம் எதிர்ப்பு மனிதர் சங்கிலி போராட்டத்தின் போது தெரிவித்தார்

Body:புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் திமுக கூட்டணி கட்சிகளான ,கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பல கட்டப் போராட்டங்கள் நடந்து வருகின்றன இன்று அண்ணா சாலையில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிவா, வெங்கடேசன் மற்றும் அக்கட்சியினர் மாணவர் கூட்டமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர் பின்னர் செய்தியாளர் சந்தித்த முதல்வர் நாராயணசாமி

மத்திய அரசு புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டு வர உள்ளதாக மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்து இருந்தது இதற்கு புதுச்சேரி அரசு சார்பில் புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என பெட்ரோலியத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் இதனை பரிசீலிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார் மேலும் வர உள்ள சட்டமன்ற கூட்டத் தொடரின் போது புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்

Conclusion:ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரியில் அனுமதிக்க மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல் நாராயணசாமி ஹைட்ரோகார்பன் திட்டம் எதிர்ப்பு மனிதர் சங்கிலி போராட்டத்தின் போது தெரிவித்தார்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.