ETV Bharat / bharat

எதிர்க்கட்சிகளிடம் பணிந்த ஜெகன் மோகன் அரசு

author img

By

Published : Dec 9, 2019, 12:52 PM IST

அமராவதி: முதலமைச்சரின் அலுவலகம் மற்றும் குடியிருப்பை புதுப்பிக்க ரூ.3.10 கோடி ஒதுக்கப்பட்ட விவகாரத்தில், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை அடுத்து ஜெகன் மோகன் அரசு திட்டத்தை கைவிட்டது.

Following Oppn attack, AP govt cancels work worth Rs 3.1 cr at CM's residences

ஆந்திராவில் ஜெகன் மோன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், முதலமைச்சரின் குடியிருப்பு மற்றும் அலுவலகம் ரூ.3 கோடியே 10 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும் என கூறியிருந்தார்.

இது எதிர்கட்சிகளால் விவாதப் பொருளாக மாறிவிட்டது. மக்கள் அவதியுறும் இச்சூழலில் இந்த பகட்டு, பந்தா செலவு தேவையா? என எதிர்கட்சிகள் அரசின் மீது விமர்சனத்தை முன்வைத்தனர்.

இதையடுத்து முதலமைச்சரின் குடியிருப்பு மற்றும் அலுவலகம் புதுப்பிப்பு திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ரூ.39 லட்சம் முதலமைச்சரின் வீட்டில் பர்னிச்சர் பொருட்கள் வாங்கவும், ரூ.73 லட்சம் அலுமினிய கதவுகள் பொருத்தவும், ரூ.22.50 லட்சம் செலவில் கழிவறை உள்ளிட்ட வசதிகளுக்காகவும், ஒரு கோடியே 20 லட்சம் வருடாந்திர பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்தை தொடர்ந்து இத்திட்டத்தை ஜெகன் மோகன் அரசு கைவிட்டுள்ளது.

.இதையும் படிங்க : ஆந்திர அரசியலில் பரபரப்பு: சிரஞ்சீவி, ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு

Intro:Body:

https://www.aninews.in/news/national/politics/to-ward-off-criticism-andhra-govt-cancels-rs-3-crore-work-orders-at-cms-residence20191209073252/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.